வரும் மாதம் 5ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்!
Sunday, October 2nd, 2016
நாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் இம் மாதம் 5ம் திகதி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவொரு சலுகைகளும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உலக ஆசிரியர் தினத்தில் அந்த சலுகைகளை பெற்றுத் தருமாறு கோரி, எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும் - மஹிந்த தேசப்பிரிய...
மதவாதத்தை முதலீடாக்க நீதிபதியை விமர்சிப்பதை ஏற்க முடியாது - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாள...
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 7 நாடுகளுக்கு இலவச விசா - அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக...
|
|
|


