வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக கையூட்டலுக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினர் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்துக்கு விஜயம்!

அண்மையில் நடந்து முடிந்த லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக கையூட்டலுக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினர் இன்று ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்துக்கு சென்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா கிரிக்கட் சபையிடம் கோரியுள்ள தரவுகளை எதிர்வரும் 14 நாட்களுக்குள் வழங்கவேண்டும் என அந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவற்றை வழங்க தவறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அமைப்பின் தலைவர் காமந்த துஷார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கைக்கு வருகைதவுள்ள யுனெஸ்கோ பணிப்பாளர்!
"சைலன்ஸ் இன் த கோட்" திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவு!
யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணை - ஏற்பாடுகள் செய்யப்படும் என விவசாய அமைச்சர...
|
|