வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4,532 டெங்கு நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 1,936 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாகாண சபை தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானம் – கூடுகின்றது அமைச்சரவை !
நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தகவல்!
தூசு தட்டப்படும் அலுவலகம் - மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் கட்சி அலுவலகம் அல்ல - நீல நிறம் அகற்ற...
|
|