வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 75,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!
Tuesday, November 28th, 2023இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 75,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், குறித்த மாவட்டத்தில் 35,537 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 6,884 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாட்டில் மின்சார பற்றாக் குறையை தீர்க்க வருகின்றது மாற்றுத்திட்டம்!
யாழ்.மாவட்டத்திலும் தொற்றாளர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்தது - மாவட்ட செயலகம் தகவல்!
2 மில்லியன் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்த...
|
|
|


