யாழ்.மாவட்டத்திலும் தொற்றாளர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்தது – மாவட்ட செயலகம் தகவல்!

Tuesday, June 29th, 2021

யாழ். மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை தாண்டியுள்ளதாக, யாழ். மாவட்ட கொரோனா செயலணி அறிவித்தள்ளது.

அதனடிப்படையில் நேற்று மாலை வரை, யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் 87ஆக உயர்ந்துள்ளன.

மேலும், 4 ஆயிரத்து ,616 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 793 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

அத்துடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கிராம அலுவலர் பிரிவும் யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே/69, ஜே/71 கிராம அலுவலர் பிரிவுகளும், கரவெட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரணவாய்ப் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்துக்குக் கிடைத்துள்ள 50 ஆயிரம் தடுப்பூசிகள், நேற்று தொடக்கம், முதல் டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

முதல் டோஸ் தடுப்பூசி பெற்ற நிலையங்களுக்கே சென்று, 2 ஆவது டோஸுக்கான தடுப்பூசிகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய சகல பிரதேசங்களிலும் 2ஆவது டோஸ் தடுப்பூசி போடும் பணி, வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவல் திட்டமிட்டு செயலல்ல - விசாரணைகளை மேற்கொண்ட குழு தெரிவிப்பு!
இரத்தினக்கல் ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு தீர்வு - பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடவடிக...
வன்முறைகளினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே முதல் பணி - அமைச்சர் பிரசன்ன ...