வரி விலக்கு தொடர்பில் பொதுவான நிலைப்பாடு உருவாக்கப்பட வேண்டும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்து!

Thursday, November 29th, 2018

யாழ் மாநகர சபையால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் வரி அறவீடு செய்யப்படும்போதும் சரி வரிவிலக்களிக்கும் போதும் சரி பல குறைபாடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் பல விமர்சனங்களும் தேவையற்ற பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் மாநகரசபை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

அந்தவகையில் குறித்த பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதற்காக அடுத்த ஆண்டுமுதல் பொதுவான கொள்கை நிலைப்பாட்டுடன் கூடிய நிலையான வரிவிலக்கு தொடர்பிலான அறிக்கை தயாரிக்கப்பட்டு சபையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா. செல்வவடிவேல் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த வரிவிலக்கு தொடர்பான அறிக்கைகளை தயாரிக்கும்போது துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து எதுவித குறைபாடுகளோ முரண்பாடுகளோ ஏற்படாத வகையில் அவை தயாரிக்கப்படுவது அவசியம் என்றும் அவர் வலியறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு சபை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: