வரி விதிப்பு : விவசாயத்திற்கு கூடுதல் வருமானம்!

Wednesday, August 22nd, 2018

சுங்க வரி விதிக்கப்பட்டமையினால் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு 40 ரூபா சுங்க வரி விதிக்கப்பட்டமையினால் உள்ளூர் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 140 ரூபாவுக்கும், 160 ரூபாவுக்கும் இடையில் கொள்வனவு செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தமது உற்பத்திக்காக இதுவரையில் கிடைக்கப்பெற்ற ஆகக்கூடிய விலை இதுவாகும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, அரிசி இறக்குமதியையும் கட்டுப்படுத்துவதற்காக 25 சதமாக இருந்த சுங்க வரி, 70 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் விவசாயிகள் நெல்லுக்கு ஆகக்கூடிய விலையைப் பெற்று வருகின்றனர்.

இவ்வாறான விடயங்களில் விவசாயிகளின் நலனைக் கருத்திற் கொண்டே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

Related posts: