வரி விகிதங்களை திருத்துவது தொடர்பில் நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய. தெரிவிப்பு!

வரி விகிதங்களை அடிக்கடி அதிகரிப்பதற்கு பதிலாக, வரி தளத்தை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய. எதிர்வரும் காலங்களில் வரிகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – வரி ஏய்ப்பு பிரச்சினையை தீர்ப்பதன் மூலம் வரி விகிதங்கள் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும்.
சில இறக்குமதிகள் உட்பட பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகையை பெருமளவிலான மக்கள் தவறாக பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரி வசூல் முறைகளை மறுசீரமைப்பதன் மூலமும், வரி அடிப்படையை விரிவுபடுத்துவதன் மூலமும் அரசின் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகளை அரசாங்கம் தேடும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அமெரிக்கா செல்லும் பிரதமர்!
எதியோப்பிய விமான விபத்தின் எதிரொலி - போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு அமெரிக்காவிலும் தடை!
கிராமவாசிகளினால் கிராமப்புற சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவது இல்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெ...
|
|