வரி நடைமுறை குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தனி நீதிமன்றம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Monday, May 29th, 2023
வரி நடைமுறையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வரி செலுத்துதலை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் வரி விதிப்பு முறையை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்றும் வகையில் இலத்திரனியல் முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் வரி விவகாரங்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
இன்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிநுட்ப அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!
பொதுப் போக்குவரத்துகளைத் மாணவர்கள் தவிர்க்க வேண்டும் – வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் கோரிக்கை!
மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!
|
|
|


