வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று!

Saturday, December 10th, 2016

நல்லாட்சி அரசாங்கத்தின் 2017ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் மாலை நடைபெறவுள்ளது.

தேசிய அரசாங்கத்தின் வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரச ஆதரவு அணியினர், அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன வாக்களிக்கவுள்ளன.

அதேபோன்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியனவும் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படகின்றது. ஜே.வி.வி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது எதிரணி தரப்பினர் எதிராக வாக்களிக்கவுள்ளதா தெரியவருகிறது.

கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டமானது இரண்டாம் வாசிப்புக்காக சபையில் சமர்பிக்கப்பட்டது.

எட்டு நாட்கள் விவாதத்தின்பின்னர் நவம்பர் 18ஆம் திகதி 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இரண்டாம் வாசிப்பானது 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு­ செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 162 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் நம்பவர் 19ஆம் திகதிமுதல் குழுநிலை விவாதம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று நிதி அமைச்சுக்கான குழு நிலை விவாதம் இடம்பெற்று மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அதனை அடுத்து குழு நிலை விவாதங்கள் நிறைவடைந்த பின்னர் வரவு செலவுத்திட்டத்தின் மீதான அறிவிப்புகளை நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க வெளியிடவுள்ளார். இதனையடுத்து மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1314195337B2

Related posts: