வரவு செலவுத்திட்டம் 110 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!
Saturday, December 10th, 2016
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 165 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதனடிப்படையில், 110 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சினரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 220 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச உட்பட 4 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


