வரவு – செலவுத்திட்டம் குறித்த கண்காணிக்கக் குழு நியமனம்!

Thursday, November 17th, 2016

வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் உரிய முறையில் நடைபெறுகின்றதா என்பதைக் கண்காணிக்கும் வகையில் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.

இலங்கை பட்டயக் கணக்காளர் மன்றத்தில் நேற்று முன்தினம்  நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,

வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் ஏராளமாக முன்வைக்கப்படுகின்றது. ஆனால் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதனைக் கருத்திற்கொண்டு, இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிவுகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்பதை அவதானிப்பதற்கு கண்காணிப்புக் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இக்குழுவில் பத்து முதல் பன்னிரண்டு வரையானோர் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் மற்றும் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்பன உரிய முறையில் செலவிடப்படுகின்றதா? என்பதைக் கண்காணித்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெறும் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 thumb_budget-logo

Related posts:

திருமலையில் தமிழர் விகிதாசாரத்தைப் பாதுகாத்தது ஈ.பி.டி.பின் அரசியல் சாணக்கியமாகும் - ஊடகப் பேச்சாளர...
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளது - அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!
தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பை விடுத்தது கல்வி...