வரவுசெலவு திட்ட விவாத நாட்களில் மாற்றம்!

Wednesday, September 19th, 2018

2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டு விவாதம் இடம்பெறும் தினங்களை மாற்றி அமைக்க ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

கடந்த தினம் இடம்பெற்ற ஆளுங்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டை எதிர்வரும் நொவம்பர் மாதம் 8ம் திகதி முன்வைத்து, டிசம்பர் 8ம் திகதி வரையில் விவாதிக்க முன்னர் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் விவாதத்துக்கான நாட்கள் போதாது என்று எதிர்கட்சிகள் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நொவம்பர் மாதம் 8ம் திகதி முன்வைக்கப்படவிருந்த பாதீடானது, நொவம்பர் 5ம் திகதியே முன்வைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்று முதல் 26 நாடாளுமன்ற அமர்வு நாட்களுக்கு பாதீடு குறித்த விவாதம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

பயிரிடப்படாத பெருந்தோட்ட காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆலோசனை - தொழில் அமைச்சர் நிமல்...
உள்ளூராட்சித் தேர்தல் தாமதமானால் நீதிமன்றம் செல்வோம் – பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹ...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!