வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்ல அனுமது பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை! …..

Sunday, September 18th, 2022


வலிகாமம் வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்ல அணுமதி பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னன் மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக பொறுப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் ஆகியோருடன் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் மேற்கொண்ட கலந்தல்துரையாடலின் போதே
குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வயாவிளான் தெற்கு சிவசக்தி  முன்பள்ளியில் ஆலயத் தலைவர் வ.மகாலிங்கம்  தலைமையில் 2022.09.18 இன்று (ஞாயிறு) நடைபெற்ற கூட்டத்தின் போது குறித்த நிர்வாகத்தினர் மேலும் கருத்து கூறுகையில்-

உயர் பதுகாப்பு வலயத்திற்குள் ஆலயம் இருப்பதால் நீண்ட பல வருடங்களாக தமது ஆலயத்திற்குன்சென்று வழிபாடுகளையோ ஆலையத்தின் அபிவிருத்திகளையோ தம்மால் முன்னெடுக்க முடியாதுள்ளது.

அனைத்து சமயங்களையும் சமமாக மதித்து அவரவர் சமயங்களின் புனிதத் தன்மையையும் பாரம்பரியங்களையும் பாதுகாப்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முடியுமானவரை  சேவைகளையும் ஏற்படுகின்ற தடைகளையும் அகற்றி மத வழிபாடுகளை மேற்கொள்ள அடியவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

அந்தவகையில் எமது ஆலயத்தின் திருவிழாவையும் அடியவர்களாகிய நாம் மேற்கொள்ள வாய்ப்பை உருவாக்கி தருவார் என்று நம்பிக்கையுடன் கோரிக்கை விடுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடலின்போது கட்சியின் வலி.வடக்கு நிர்வாக பொறுப்பாளர் அன்பு மற்றும் ஆலைய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்ததுடன் பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடரிலும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கோர தேவையில்லை - ஜனாதிபதியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக...
மலையக மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதை ஏற்கிறேன் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு க...