வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவும்: மனித உரிமைகள் ஆணைக்குழு

அண்மைய காலமாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தமது கவலையை வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இவ்வாறான வெறுக்கத்தக்க செயல்களை தூண்டுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதிபதி அறிவுறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தை மாத்திரமன்றி நாட்டின் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, சட்டம் ஒழுங்கு அமைச்சு பொலிஸ்மா அதிபருக்கு உடன் பணிப்புரை விடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, பல சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டமையை சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது
Related posts:
|
|