வன்னி தேர்தல் மாவட்டத்திலும் வேட்புமனு தாக்கல் செய்தது ஈ.பி.டி.பி – மக்கள் ஆணையைப் பெற்று பேரம் பேசும் சக்தியாக ஈ.பி.டி.பி உருவெடுக்கும் என திலீபன் தெரிவிப்பு!

Tuesday, October 8th, 2024

நாடாளுமன்ற தேர்தலுக்கான வன்னி தேர்தல் மாவட்ட வேட்புமனுவையும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்துள்ளது.

பிற்பகல் 3 மணியளவில் வவுனியா மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில்  மாவட்டத்தின் முதன்மை வேட்பாளரும் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தலைமையில் குறித்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. 

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மக்கள் ஆணையைப் பெற்று பேரம் பேசும் சக்தியாக வருவோம் என ஈபிடிபி கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையறிந்து மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

வன்னி மட்டுமன்றி யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணம், கொழும்பு ஆகிய இடங்களிலும் போட்டியிட்டு மக்களின் ஆணையைப் பெற்று தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான எமது கட்சி பேரம் பேசும் சக்தியாக வருவோம்.

இதேநேரம் வன்னியில் இரண்டு ஆசனங்களையும், யாழில் மூன்று ஆசனங்களையும் பெறக் கூடிய நிலை இருக்கின்றது என நம்பிக்கையும் அவர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


யாழ். பொது நூலகத்திற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க  நூல்களை அன்பளிப்புச் செய்த கனடிய வெளிவிவகார அமைச்ச...
அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது - அரச அச்சகம் அறிவிப...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் - இழப்பீடாக மேலும் 2.5 மில்லியன் டொலர்கள் - கடல்சார் சூழல் பாதுகா...