வனப் பகுதியில் பாரிய தீ – மொனராகலையில் இருவர் கைது!

Tuesday, July 9th, 2019

மொனராகலை பொலிஸ் பிரிவில் ஏக்கர் 08, அலியாவத்தை சரணாலயத்தில் தீடிரென தீ ஏற்பட்டுள்ளது.

மொனராகலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய உடனடியாக செயற்பட்ட அவர்கள் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த தீப்பரவலால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப் பிரதேசத்தில் தீ வைத்த குற்றச்சாட்டுக்காக பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர். அத்துடன் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: