‘வனக் கிராம்’ திட்டத்தை மருதங்கேணி, மணற்காடு பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் சி.பி.இரத்னாயக்க தெரிவிப்பு!
 Saturday, March 5th, 2022
        
                    Saturday, March 5th, 2022
            
வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களின் இலக்குகளையும் மக்களின் வாழ்வியல் எதிர்பார்ப்புக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் சமந்தப்பட்ட அமைச்சினால் நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘வனக் கிராம்’ எனும் திட்டத்தினை மருதங்கேணி, மணற்காடு பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க முடியும் என்று அமைச்சர் சி.பி.இரத்னாயக்கா தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த கிராமத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளையும் உருவாக்குவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், மணற்காடு சவுக்கு காட்டு பிரதேசத்தினை வனப் பாதுகாப்பு திணைக்களங்களிடம் இருந்து விடுவித்து தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையிலேயே வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. இரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்பதாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காணிகளில், விவசாய நடவடிக்கைகளுக்கு பொருத்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலில் ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடப்பட்ட வியடங்களுக்கு பொறுப்பான துறைசார் அமைச்சர் சி.பி. இரத்னாயக்கா தலைமையில் நடைபெற்ற கறித்த நிகழ்வின்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மாவட்ட அரச அதிபர்கள், துறைசார் அதிகாரிகள் பிரதேச செயலர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        