வணிகத்திற்காக மூன்றாம் தரப்பினரையும் தொடர்பு கொள்ளவில்லை – சினோபெக் நிறுவனம் அறிக்கை!

Friday, May 26th, 2023

இலங்கையில் தனது நடவடிக்கைகளுக்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகளை மறுத்து Sinopec Fuel Oil Lanka நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் இயங்கும் எந்த பெட்ரோல் நிலையங்களையும் அல்லது எந்தவொரு வெளி நிறுவனத்தையும் அல்லது வணிகத்திற்காக மூன்றாம் தரப்பினரையும் தொடர்பு கொள்ளவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sinopec Fuel Oil Lanka நிறுவனம் தனது எரிவாயு நிலைய சேவை உரிம உரிமைகளை வேறு எந்த தரப்பினருக்கும் மாற்ற விரும்பவில்லை என்றும், தனது வர்த்தக நாமத்தின் நற்பெயரைப் பாதுகாக்க மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: