வட்டுக்கோட்டையில் முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

Thursday, February 15th, 2024

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (15) காலை இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தீவகம் உள்ளிட்ட குடாநாட்டின் பல பகுதிகளில் கடற்பெருக்கு - கிராமங்களுக்குள் நுழைந்தது கடல் நீர் – அ...
மக்களின் தேவைகளை நிறைவேற்றும்போது அரச கொள்கையின் பிரகாரமும் செயற்பட வேண்டியது அவசியம் – துறைசார் அதி...
ஸ்ரீலங்கன் விமான சேவை, 2024 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய உத்தரவாதப் பத்திரத்திற்கான வட்டித் தொகையை செலு...