வட்டுக்கோட்டையில் முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
Thursday, February 15th, 2024
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (15) காலை இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாத்தளை சம்பவம்: எட்டு பேரினதும் உடலங்கள் மீட்பு!
உள்ளுர் உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளில் சந்தைப்படுத்துவதற்கு புதிய கம்பனியொன்றை நிறுவுவதற்கு அனுமத...
இலங்கை - நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு - இலங்கையின் பால், கைத்தொழில் மற்...
|
|
|


