வட்டி விகிதங்களை அதிகரித்தது மத்திய வங்கி – இன்றுமுதல் நடைமுறைக்கு!

அண்மையில் அறிவிக்கப்பட்ட மூன்று பரிவர்த்தனைகளுக்கான அதிக வட்டி விகிதங்கள் இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் என்பவற்றின் கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டிருந்தது.
அத்துடன் அடகு வசதிகளுக்கான வருடாந்த வட்டி வீதமானது 12 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே குறித்த அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் அகற்றம் - யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவ...
புதிய கொரோனா அச்சுறுத்தல்: இலங்கையின் விமான நிலையங்கள் துறைமுகளில் விசேட நடவடிக்கை!
அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் - ...
|
|