தீவகத்தில் புனரமைக்கப்படுகின்றன பிரதான வீதிகள் – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பலன்!

Wednesday, July 7th, 2021

தீவக பிரதேச மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பிரதேசத்தின் பல்வேறு வீதிகள் காப்பெற் வீதிகளாகவும் கொங்கிறீற் வீதிகளாகவும் புனரமைப்பு செய்யப்படுவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தீவக பிரதேசத்தில் வாழும் மக்கள் தமது அத்தியாவசிய தேவை கருதி தமது வாழிடங்களிலுள்ள பல வீதிளின் புனரமைப்பை துரிதமாக மேற்கொண்டு தருமாறு குறித்த பிரதேசங்களின் தவிசாளர்கள் மற்றும் நிர்வாக பொறுப்பாளர்களூடாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் மக்களின் அவசிய தேவை கருதியதாக வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களில் 13 வீதிகள் புனரமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதில் வேலணை பிரதேசத்தில் 27.5 கிலோ மீற்றர் தூரம்கொண்ட நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த வழுக்கையாறு குறிகாட்டுவான் பிரதான வீதி உள்ளடங்கலாக   வேலணை வைரவர் கோவில் வீதி, வேலணை நாச்சிமார் வீதி, கந்தசாமி கோயில் கழுதைப்பிட்டி வீதி, கந்தசாமி கோயில் நாச்சிமார் கோயில் வீதி ஆகியனவும்,

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் சுருவில் உப்புக்குள வீதி, அனலைதீவு பிரதான வீதியின் உள்ளக வீதி. எழுவதீவு உள்ளக விதி, கரம்பொன் கிழக்கு உள்ளக வீதி, தம்பாட்டி உள்ளக வீதி, பருத்தியடைப்பு உள்ளக வீதிகளும்.

நெடுந்தீவு பிரதான வீதி என்பவற்றுடன் காரைநகர் சுற்றுவீதி ஆகியன புனரமைக்கப்படுவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: