தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் அகற்றம் – யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் மகேசன் தெரிவிப்பு!

Wednesday, May 6th, 2020

தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாதைகள் இன்றிலிருந்து அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தில் தேர்தல் தொடர்பான விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் போது பொலிஸார் மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

குறித்த கூட்டத்தில் தேர்தல் ஆணைகுழுவிற்கு கிடைக்கப்பெற்ற 6 முறைப்பாடுகளின் அடிப்படையில் தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் இன்றிலிருந்து அகற்றுவவதாக தீர்மானிக்கப்பட்டது

இதன் முதற்கட்டமாக இன்றையதினம் சில பதாதைகள் அகற்றப்பட்டதாகவும் ஏனைய பதாதைகளும் உரிய முறைப்பாடுகள் வழங்கப்படும் இடத்தில் அவை அகற்றப்படும் எனவும் தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வறிய மக்களை விலைவாசியால் மேலும் துன்புறுத்தியது சஜித்தின் அரசே- யாழ். மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ...
தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறிய 18 அணுசக்தி திறன் கொண்ட போர் விமானங்கள்!
தவறிழைத்த மாணவர் தொடர்பில் மாணவர்களுக்கு விடுகைப்பத்திரம் வழங்குவது வரம்பு மீறலாகும் - இலங்கை மனித உ...