வடமாகாண வைத்தியசாலைகள் அபிவிருத்தி!
Thursday, August 31st, 2017
வடமாகாணத்தில் உள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குதல் மற்றும் பொதுமக்கள் மீள குடியமர்த்தப்படும் பிரதேசங்களில் சுகாதார அடிப்படை வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.
இதற்கமைவாக இந்த பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியாசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைவாக நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூட்டு முயற்சியாக வடக்கு மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் பெரியாஸ்பத்திரி மற்றும் பருத்தித்துறை, மாங்குளம் ஆகிய ஆதார வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இது தொடர்பாக சுகாதார பேசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
|
|
|


