மாற்றமடைகின்றதா வடமாகாண சபையின் அமைச்சரவை?
Monday, May 23rd, 2016
வடமாகாண சபையின் அமைச்சரவையில் இன்று மாலை மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண சபையின் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளமையினை வடமாகாண ஆளுநர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் வடமாகாணசபை அமைச்சர்களின் செயற்பாடுகளில் திருப்தியற்ற நிலையில் அவர்களை மாற்றி புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவேண்டும் என வடமாகாண சபையிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இருந்தும் இன்றையதினம் சுகாதார அமைச்சரின் கீழ் உள்ள பெண்கள் விவகாரம் தொடர்பான அமைச்சுப்பொறுப்புகளை மீண்டும் முதலமைச்சர் பொறுப்பேற்கவுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்டாருக்கான இலங்கை தூதரகத்தின் சிறப்பு அறிக்கை
துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி - வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு பூட்டு!
யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார சேவைகள் பணிப்பாள...
|
|
|


