வடமாகாண ஆசிரியர்களின் கொடுப்பனவு வழங்குவதில் இழுபறி!

Tuesday, December 25th, 2018

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலருக்கு நீண்டகாலமாக நிலுவைக் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. கல்வித் திணைக்களம் உரிய கவனம் இன்றிச் செயற்படுகின்றது என்று ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகள் 5 ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாது இழுத்தடிக்கப்படுகின்றது. பலமுறை நேரில் சென்று கோரியபோதும் ஒரு சிலருக்கு மட்டுமே நிலுவைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இருப்பினும் பலருக்கு வழங்கப்படவே இல்லை. இவ்வாறு வழங்கப்பட்ட சிலருக்கான கொடுப்பனவு இறுதியாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவில் வழங்கப்பட்டது. இதற்குப் பின்னர் எவருக்கும் வழங்கப்படவில்லை.

வலய மற்றும் மாகாண திணைக்களங்களில் பணியாற்றும் அலுவலர்களின் அசிரத்தையே இந்த தாமதங்களுக்குக் காரணமாக இருப்பது கண்கூடாகத் தெரிகின்றது. எத்தனை தடவைகள் அலுவலகங்களுக்கு அலைந்தாலும் அது தொடர்பில் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts:

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மீண்டும் தாமதம் – 4 ஆம் திகதி அறிவிப்பு வெளிவரும் என கல்வி அமைச...
பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துங்கள் - பொதுமக்களிடம் கடல்சார் சூழல் பாதுகாப...
பழைய காயத்தை மீண்டும் கிளறுவது நல்லிணக்கம் அல்ல - இதனால் நாட்டில் குரோத மனப்பாங்கு அதிகரிக்கின்றது எ...