வடமாகாணத்தில் முப்படையினர், பொலிஸாரின் வசமுள்ள காணிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன
Thursday, May 5th, 2016
வடமாகாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் வசமுள்ள காணிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன வடமாகாண முதலைமைச்சர் க. வி. விக்கினேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்குக் கொண்டு வரும் நோக்கிலேயே இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்.
வடமாகாணத்தில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் , அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகள் , அரசுக்குச் சொந்தமான காணிகள் என மூன்று பகுதிகளின் கீழ் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன .
வடமாகாணத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்கள் , உள்ளுராட்சிச் ஆணையாளர், சபைச் செயலாளர்கள் ஊடாகச் சகல விபரங்களும் திரட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முழுமையான நல்லிணக்கம் இன்னமும் ஏற்படவில்லை - ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ!
இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு விரைவில் புதிய வரி முறைமை அறிமுகப்படுத்தும் - சுற்றுச்சூழ...
ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு - இலங்கை மத்தி...
|
|
|


