ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
Monday, August 14th, 2023
ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
மக்களுக்கு நான் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதே எனது இலட்சியம் -ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!
அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு - வெளியேறி விம...
|
|
|


