வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை
Friday, September 8th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு, பராமரிப்பு வேலைகளுக்காக வடமாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை(08) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவிதித்துள்ளது.
இதன் பிரகாரம், இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் கரிக்கட்டுக் குளத்திலும், காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் வேளாங்குளம், வேளாங்குளம் விமானப்படை, மடுக்குளம் ஆகிய பிரதேசங்களிலும், காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை மன்னார் மாவட்டத்தின் மடுக்கரைப் பிரதேசத்திலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய கல்வித்திட்டம் - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்!
சடலத்தை எடுத்துச் செல்ல பேரம் - யாழ். போதனா மருத்துவமனைப் பணியாளர்கள் நால்வருக்கு கட்டாய விடுமுறை!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!
|
|
|


