வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத் தேர்த் திருவிழா இன்று!

Wednesday, October 4th, 2017

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று  புதன்கிழமை(04) காலை-08 மணிக்குச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

நாளை வியாழக்கிழமை மாலை-05 மணியளவில் வங்கக் கடலில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவும், வெள்ளிக்கிழமை காலை கேணித் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும். ஆலயத் தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

வழமை போன்று இவ்வருடத் தேர்த் திருவிழாவிலும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: