மத்தள வானூர்தி நிலையத்தை கையேற்க இந்திய நிறுவனமொன்று ஆர்வம்!

Sunday, August 13th, 2017

இலங்கையின் இரண்டாவது சர்வதேச வானூர்தி நிலையமான மத்தள வானூர்தி நிலையத்தை கையேற்க இந்திய நிறுவனமொன்று முன்வந்துள்ளதாக த ஹிந்து நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்தள வானூர்தி நிலையத்தின் முகாமைத்துவம், வழிநடத்தல், பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி முதலான பணிகளை மேற்கொள்ள குறித்த இந்திய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<

சீனா பெரும்பான்மை பகுதியை கைப்பற்றியுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் அமைந்துள்ள, மத்தள வானூர்தி நிலையத்தில் முதலீடு செய்ய இந்தியா முன்வந்துள்ளமை ஓர் உபாயமாக கருதப்படுகிறது.மத்தள வானூர்தி நிலையத்தில் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வது தொடர்பான இந்திய அரசாங்கத்தின் யோசனை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது

இதனூடாக மத்தள வானூர்தி தளத்தின் 70 சதவீத உரிமையை 40 வருட காலத்துக்கு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.இதில் இலங்கை அரசாங்கம் 88 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் என இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்தியாவின் இந்த யோசனை தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட யோசனை அங்கீகரிக்கப்பட்டதாக ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

Related posts: