வடபகுதி கடற்தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி, பிரதமரை விரைவில் சந்தித்துப் பேச்சு!
Friday, July 15th, 2016
வடபகுதி கடற்தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் விரைவில் ஜனாதிபதி, பிரதமரைச் சந்தித்து இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசவுள்ளனர்.
குறித்த சந்திப்புத் தொடர்பில் ஆராய்வதற்கான எதிர்வரும்- 21 ஆம் திகதி கடற்தொழில் அமைச்சின் மண்டபத்தில் இடம்பெறும் கூட்டத்தில் வடமாகாணத்தின் மீனவ சங்கப் பிரதிநிதிகளைக் கலந்து கொள்ளுமாறு யாழ். மாவட்ட கடற்தொழில் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது வடபகுதி கடற்தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் வட, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஆகியோரும் ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்திப்பதற்கான ஒழுங்குகளை கடற்தொழில் அமைச்சர் மேற்கொண்டு வருவதாகத் தெரிய வருகிறது.
Related posts:
இன்றுமுதல் பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பம் - சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க விசேட குழ...
யாழ். கல்லுண்டாயில் பேருந்து விபத்து - 24 பேர் வைத்தியசாலையில்!
நாட்டை ஒரு வாரத்திற்குள் வழமைக்கு கொண்டு வர வேண்டும் - பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்...
|
|
|
எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் - மூன்று கொவிட் தடுப்பூசிகளின் செ...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர், பணிக்குழாமினர் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவை!
திருகோணஸ்வரத்தை தரிசித்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – திருமலையில் State bank of india வி...


