வடக்கு வரும் புகையிரதங்களின் பாதுகாப்பிற்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள்!

Sunday, August 14th, 2016

யாழ்ப்பாணம் – கொழும்பு  புகையிரதங்கள் மீது தொடர்ந்தும் கல்லெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் குறித்த இடங்களுக்கு பயணிக்கும் புகையிரதங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமையும் தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து நேற்று ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அண்மையில் வவுனியாவை நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்றின் மீது கொழும்பின் புறநகர்ஒருகொடவத்தையில் வைத்து நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதலின்போது அநுராதபுரத்தைசேர்ந்த கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்தநிலையில் திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக புகையிரதகட்டுப்பாட்டுத் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தூரச்செல்லும் புகையிரதங்களுக்கு ஆயுதங்களுடன் கூடிய பாதுகாவலர்களின்பாதுகாப்பு நேற்று முதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: