வடக்கு மாகாணசபையின் இன்றைய நிலைகண்டு வெட்கி தலைகுனிய வேண்டியுள்ளது – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!
 Wednesday, August 17th, 2016
        
                    Wednesday, August 17th, 2016
            
வடக்கு மாகாணசபையின் இன்றைய நிலைகண்டு வேதனைடைவதுடன் வெட்கி தலைகுனிய வேண்டியதாகவும் உள்ளது. உலகில் எங்குமில்லாத ஒரு செயற்பாடு எமது வடக்கு மாகாண சபையில் முலமைச்சரால் தனது அமைச்சர்களுக்கெதிராக பிரேரணையாக கொண்டுவரப்பட்டு அதனை கடந்த இரு வாரமாக விவாதித்து நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பதுடன் மக்களது வரிப்பணங்களையும் விரையம்செய்துகொண்டிருக்கிறார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளருமான வைத்தியநாதன் தவநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (16) வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களது முறைகேடுகள் தொடர்பாக முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட விசாரணை குழு தொடர்பான இரண்டாவது அமர்வு சபையில் விவாதத்திற்கு எடுத்தக்கொள்ளப்பட்டபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –
கட்சி விடயங்களை பேசவும் வீண் விவாதங்களை நடத்தவும் ஆளுங்கட்சி மக்களுடைய வரிப் பணத்தை செலவிடுவதை அனுமதிக்கமுடியாது. வடக்கு மாகாண சபையின் முடிவுற்ற காலப்பகுதியில் மக்களது வரிப் பணங்களை வீணடிப்பதும் திட்டங்களை செய்துமுடிக்காது தடுப்பதற்கான வழிகளை தேடிக்கண்டுபிடிப்பதும் அவற்றுக்காக வரையறைகளின்றி தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் தான் நடைபெற்றுள்ளது.
இத்தகைய ஒரு வெட்கக்கேடான செயற்பாடுகளால்தான் இந்த அவை செயற்றிறனற்ற அவையாக உருவெடுத்து வடக்கின் அபிவிருத்திகளை முடக்கி வருவதுடன் இதுவரை மக்களுக்கான எந்தவொரு தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க முடியாது விவாதித்துக் கொண்டிருக்கும் மண்டபமாக மாறியுள்ளது. இத்தகைய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே வடமாகாண அமைச்சர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக மாகாண முதலமைச்சரினால் உருக்கப்பட்ட விசாரணை குழுவிற்கு தேவையான நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கு முதலமைச்சருக்கு அனுமதியளிக்க கோரும் பிரேரணை சிறிய திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        