புதிய சூரிய சக்தி அமைப்புகளுக்கான கட்டணத்தில் திருத்தம் – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Wednesday, October 26th, 2022
கூரையில் பொருத்தப்படும் புதிய சூரிய சக்தி அமைப்புகளுக்கான கட்டணத்தை திருத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் செய்தியில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“கூரையில் பொருத்தப்படும் புதிய சூரிய சக்தி அமைப்புகளுக்கான கட்டண திருத்தத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதுள்ள இரு அடுக்கு கட்டண முறையான 22 ரூபாய் மற்றும் 15.50 ரூபாய்க்கு பதிலாக, 500 கிலோ வோட்டுக்கு குறைவான புதிய அமைப்புக்கு 37 ரூபாய் மற்றும் 500 கிலோவோட்டிற்கு மேல் உள்ள புதிய அமைப்புகளுக்கு 34.50 ரூபாய் புதிய நிலையான கட்டணம் இருபது வருடங்களுக்கு செயற்படுத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நுண்ணறிவில்லாத பிள்ளைகளுக்கு பதவி வழங்க அரசியல்வாதிகள் ஆர்வம் - முன்னாள் ஜனாதிபதி
அமைச்சருடன் தடுமாறிய விமானி : மயிரிழையில் தப்பினார் மகிந்த அமரவீர!
முதலீடுகளுக்கு துரிதமாக அனுமதி வழங்க பொருளாதார ஆணைக்குழு – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
|
|
|


