வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரிக்கும் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!
Thursday, October 5th, 2023
வடகிழக்கு பருவமழையை அடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக டெங்கு தக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
மக்கள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கைக்கு வரும் வெளிவிவகார அமைச்சர்கள்!
புதுவருட மரநடுகைக்காக நாற்றுமேடை தயாரிப்பதில் அரச அலுவலகங்கள் ஆர்வம்!
நாடு முழுவதும் நாளை ஊரடங்கு உத்தரவு – ஜனாதிபதி செயலகம் திடீர் அறிவிப்பு!
|
|
|


