வடக்கு பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தீபத்திருநாள் பண்டிகையை முன்னிட்டு வடமாகாண மக்கள் அனைவரும் தீபாவளி தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த விடுமுறையை வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் சனிக்கிழமை பாடசாலை நடத்தி அந்த விடுமுறைக்கான தினத்தினை சரி செய்து கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் வட மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்று அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இவ்வருட பரீட்சைகளின் கால அட்டவணை வெளியீடு!
கிராமியக் கூட்டுறவு வங்கிகள் கணினி மயம்!
ரூபாவின் பெறுமதி வலுப்பெற்ற போதிலும் பொருட்களின் விலை குறைவடையவில்லை - இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உர...
|
|