அபராதத் தொகை அதிகரிப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Tuesday, January 23rd, 2018

கடந்த பாதீட்டின்போது முன்வைக்கப்பட்ட வீதி போக்குவரத்து அபராதம் தொடர்பான சீர்திருத்தம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட அபராத தொகைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை, அது குறித்த சீர்திருத்தங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் புதிய அபராதத் தொகையை செயற்படுத்துவதற்காக கால அவகாசம் தேவைப்படுவதாக போக்குவரத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.எப்.பதிநாயக்க தெரிவித்தார்.

குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஊடாக அதனுடன் தொடர்புடைய படிவங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதன்பின்னர் உரிய முறையில் தயாரிக்கப்படும் படிவங்கள் நாடு பூராகவும்  உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும்.

அதன்பின்னரே திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து அபராதத்தை செயற்படுத்த முடியும் என சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட அபராத முறைக்கமைய அதிக வேகத்தில் பயணித்தல் – அபராதம் 3 000 ரூபா வரைபோக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடல் – 500 ரூபா தொடக்கம் 1 000 ரூபா வரை

புpரதான வீதியில் நீண்ட நேரமாக வாகனமொன்றின் பின்னால் பயணித்தல் – அபராதம் 20 ரூபா தொடக்கம் 1 000 ரூபா வரை

ஆசனப்பட்டி அணியாமல் வாகனம் செலுத்துதல் – அபராதம் 500 ரூபாய் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து சட்டத் திருத்தத்தின்படி 33 போக்குவரத்து குற்றங்களுக்காக இவ்வாறு அபராதத் தொகை சீர்திருத்தப்பட்டுள்ளது.

Related posts:


பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என்ற தீர்மானத்திற்கு விசேட வைத்தியர்கள் சங்கம் கண்டனம்...
நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதா – சபாநாயகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ...
உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது - பதவியிலிருந்து...