வடக்கு கிழக்கு மாகாணங்களில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை!
Tuesday, November 1st, 2016
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற மின்சார தேவையினை பூர்த்திசெய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் 25 ஆயிரம் குடும்பங்கள் அளவில் மின்சார தேவை நிலவுவதாகவும் இதனை விரைவாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் குறிப்பிட்டார்.அம்பாறை மாவட்டத்தில் நிலவி வந்த மின்சாரத் தேவைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டில் 11 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் தேவைக்காக விண்ணப்பித்திருந்தனர். பொல்லேபெத்த ஆசிவாசிகளின் தலைவரின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கப்படுவதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் மின்சார கோரிக்கை முழுமையாக பூர்த்தி செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts:
“ஆவா” குழு தொடர்பில் தகவல் வெளியிட்டார் சட்ட ஒழுங்கு அமைச்சர் !
வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமனம்!
மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுவது முறையற்றது - மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்...
|
|
|


