வடக்குப் பாடசாலைகளில் யோகாப் பயிற்சி கட்டாயம் – 18 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது!
Sunday, February 10th, 2019
வட மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் காலை வழிபாட்டுடன் யோகா செய்வதை கட்டாயமாக்கியுள்ளது வடக்கு மாகாண கல்வி அமைச்சு. முறையான உடற்பயிற்சி எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கி இறுவட்டையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களை இணைத்து யோகா உடற்பயிற்சி காணொலி தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 நிமிடங்களைக் கொண்டமைந்துள்ளது. இந்தக் காணொலியில் வரும் மூன்று உடற்பயிற்சி மாணவர்கள் காலை வழிபாட்டின்போது மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பில் வலயங்களிலுள்ள விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர்களுக்கு 12 ஆம் திகதி அறிவித்தல் வழங்கப்படும். அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் மாகாணத்திலுள்ள தரம் 6 தொடக்கம் 13 வரையுள்ள பாடசாலை மாணவர்கள் இரண்டு நாள்கள் இந்த உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்று மாகாண கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|
|


