இருப்பதற்கே  இடமில்லை, இதில் வெற்றிடங்களை நிரப்புவது எவ்வாறு’?

Wednesday, April 27th, 2016

‘பொலிஸார் தங்குவதற்கும் தூங்குவதற்கு நிரந்தரமான கட்டடமோ அல்லது காணிகளோ யாழ். மாவட்டத்தில் இல்லை. இருந்தும் எமது கடமைகளை தொடர்ந்து செய்கிறோம்’ என்று யாழ். மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட சிவில் சமூக கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற போது பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

‘யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் தற்காலிக கட்டடங்களிலும் வீடுகளிலும் இயங்கி வருகின்றன. பொலிஸ் நிலையம் அமைந்துள்ள வீடுகள் தங்களுக்கு மீண்டும் வேண்டும் என உரிமையாளர்கள், நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.நாம்  புதிய காணிகளையும் தேடிச் செல்ல முடியாதுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நாம் எங்கு செல்வது. இருந்தும் நாம் எமது கடமைகளை செய்கின்றோம். கடமையில் இருக்கும் பொலிஸாருக்கே இருப்பதற்கு இடமில்லை. இதற்கிடையில், நிலவும் பொலிஸ் உத்தியோத்தர் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் என்றனர்.

பொலிஸ் நிலையங்களுக்கு நிரந்தர கட்டடங்களை அமைப்பதற்கான நில ஒதுக்கீடு செய்தல் தொடர்பான விடயங்களை அந்தந்த பிரதேச செயலாளர்கள், இடங்களை தெரிவு செய்து அதன் அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். தொடர்ந்து பொலிஸ் நிலையத்துக்கான நிரந்தர இடம் தெரிவு செய்யப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

Related posts: