வடக்கில் 639 பாடசாலைகள் இன்று ஆரம்பம் – கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக வடக்கின் ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, October 21st, 2021

வடக்கு மாகாணத்தில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 639 ஆரம்பப் பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகளின் ஒன்றிணைந்த ஒத்துழைப்பின் கீழ் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

இதேநேரம் “நீண்ட இடைவெளிக்குப் பின் பாடசாலைகள் திறக்கப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றனமை மகிழ்ச்சியளிக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி பாராட்டுகின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களது அர்ப்பணிப்பான சேவை பாராட்டுக்குரியது” என்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

இதனிடையே

நீண்ட நாட்களுக்கு பின்னர் நாளை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விளக்கமளித்து கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் ஒன்றிணைந்து நம்பிக்கைக்குரிய தீர்வை முன்வைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எதிர்காலம் பெற்றோரின் மகிழ்ச்சி மாத்திரமல்ல, நாட்டு மக்கள் அனைவரும் சந்தோசாத்திலுள்ளனா். அந்த மகிழ்ச்சியுடன் இலட்சக்கணக்கான மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: