வடக்கில் 17 ஆம் திகதி வரை மழை வீழ்ச்சி கிடைக்கும் – சிரேஷ்ர விரிவுரையாளர் பிரதீபராஜா அறிவிப்பு!
 Tuesday, April 13th, 2021
        
                    Tuesday, April 13th, 2021
            
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மழை வீழ்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – வடக்கு மாகாணத்தில் பொதுவாக காலை வேளைகளில் வெப்பமான காலநிலை நிலவுகின்றது
அதேநேரம் இலங்கையின் வளிமண்டலத்தின் கீழ் காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுவதால் மாலை நேரங்களில் இடி அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக கிடைக்கப் பெற வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேற்காவுகை மழை அல்லது வெப்பச் சரணமழை என அழைக்கபடும் இந்த மழையின்போது பல பகுதிகளிலும் இடி மின்னல் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுவதோடு மற்றவர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        