வடக்கில் 11 நாள்களில் 182 பேருக்கு டெங்கு!
Tuesday, January 15th, 2019
நடப்பாண்டு ஆரம்பமாகி 11 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 182 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 162 டெங்கு நோயாளர்களும், கிளிநொச்சியில் 5 டெங்கு நோயாளர்களும், வவுனியாவில் 2 டெங்கு நோயாளர்களும், மன்னாரில் 8 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும் முல்லைத்தீவில் 11 நாள்களில் எவரும் டெங்கு நோயாளியாக இனங்காணப்படவில்லை. இலங்கையில் அதிகூடிய எண்ணிக்கையைக் கொண்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட மாவட்ட கொழும்பு தொடர்ந்தும் முதல் நிலையில் உள்ளது. அங்கு 229 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாணம் இரண்டாவது நிலையில் இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையிலேயே டெங்கு நோயாளர்கள் குறைந்த மாவட்டமாக வடக்கின் முல்லைத்தீவு மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்புப் பணி தொடர வேண்டும். இல்லாதுபோனால் மீண்டும் டெங்கு அபாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


