வடக்கில் மூன்று மாதங்களுக்குள் மின்சாரம் இல்லாதவர்களுக்கு  மின்சாரம்!  பிரதி அமைச்சர் அஜித் டி .பெரேரா

Saturday, May 14th, 2016

வடமாகாணத்தில் மூன்று மாதங்களுக்குள் மின்சாரம் இல்லாதவர்களுக்கான மின்சாரம் வழங்க நடவடிக்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளன . குறிப்பாக ஓலைக்  குடிசைகளில் வாழ்ந்து வரும் மக்கள்,வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் போன்றவர்களுக்கும் இவ்வாறான மின்சார இணைப்புகள் வழங்கப்படவுள்ளது. ஒருமாதத்திற்கு இவர்களுக்கு மின்சாரக்  கட்டணங்கள் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என மின்சக்தி எரிசக்தி அபிவிருத்திப்  பிரதி அமைச்சர் அஜித் டி .பெரேரா தெரிவித்தார்.

வடமாகாணத்திற்கான உத்தியோக பூர்வ விஐயமொன்றை மேற்கொண்ட மின்சக்தி எரிசக்தி அபிவிருத்திப்  பிரதி அமைச்சர் அஜித் டி. பெரேரா நேற்று வெள்ளிக் கிழமை(13-05-2016) யாழ்ப்பாணம் விஐயம் செய்தார்.

யாழ் மாவட்டத்தின்  “மின்பாவனையாளர்களின் தேவைகளும்,  இலவச மின்சார தேவைகள் தொடர்பாக விடயங்கள் மக்களின் பங்களிப்புடன்  இருள் அகன்று முழு நாடும் ஒளி மயம் ”  எனும் தொனிப் பொருளிலான அரச அதிகாரிகளுடான சந்திப்பும் கலந்துரையாடலும்  யாழ் மாவட்டத்திலுள்ள இலங்கை மின்சார சபையின்  உப மத்திய கட்டடத்தில் வடமாகாண இலங்கை மின்சார சபை பிரதித்  தலைவர் குணதிலக்க தலைமையில் நடைபெற்றது.

இச்சந்திப்புக்குப்  பிரதம அதிதியாக மின்சக்தி எரிசக்தி அபிவிருத்தி பிரதி அமைச்சர் அஜித்  டி .பெரேரா கலந்துகொண்டார்.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மின்சக்தி எரிசக்தி அபிவிருத்திப்  பிரதி அமைச்சர் அஜித் டி .பெரேரா அங்கு உரையாற்றுகையில்.

வடமாகாணத்தில் கடந்த காலத்தில் 8572 பேர்களுக்கான மின்சாரத்  தேவைக்கான  விண்ணப்பங்கள் இருந்த நிலையில் தற்போது 4900  பேராக அதிகரித்திருக்கின்றது. இதில் அணைத்தும் நிறைவு பெற்றுள்ளது. இந் நிலையில் புதிதாக  3000 மேற்பட்டவர்களுக்குத்  தற்போது மின்சாரம் பெற்றுக்கொள்ளுவதற்கான வாய்ப்புத்  தேவையாகவுள்ளது. இதற்குப்  பணம் இல்லையென்று  மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மாவட்;ட செயலாளர்கள்,மற்றும் பிரதேச செயலாளர்கள்,கிராம சேவையாளர்கள் ஆகியோர்களுக்கு மின்சாரம் இல்லாதவர்களுக்கு மின்சாரத்தினை பெற்றுக்கொடுப்பதற்கான பணிகள் உங்களிடம் கையளிக்கப்பட்டுயிக்கின்றது. இது தொடர்பில் நீங்கள் அவற்றினை துரிதமாக இவ்வாறான பணிகளை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறானவர்களுக்கு மின்சாரத்திற்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது. இவ்வாறு மின்சார வசதிகள் மூன்று மாதத்துக்குள் இவ்வாறான குடிசைக்களுக்கு வழங்கப்படாது விட்டால் அதற்கு கிராம சேவையாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,மாவட்ட செயலாளர்கள் போன்றவர்கள் பதில் கூற வேண்டும் யென்றும் அவர் தெரிவித்தார்..

குடிசையில் வாழும் ஒரு நபருக்கு மின்சாரத்தினைப்  பெற்றுக்கொள்ளுவதற்கு அரசாங்கத்தினால்  மூன்று லட்சம் ரூபா செலவு செய்யப்படுகின்றது. இதற்காக, இலங்கை மின்சார சபை  நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளது.

இலங்கையில் உள்ள மாவட்டங்களிலுள்ள ஒரு இலட்சத்து  இருபதாயிரம் பேர்களுக்கு இவ்வாறான இலவச இணைப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறானவர்களில்  மாதாந்தம் 05 வீதமானவர்கள் மாத்திரம் மின் இணைப்புக்கான கட்டணத்தினை கட்ட முடியாத சூழ் நிலையில் காணப்படுகின்றனர். ஏனையவர்கள்  மின்சாரத்திற்கான  கட்டடத்தினைக்  கட்டிவருகின்றனர்.

பொலநறுவை , அனுராதபுரம் , இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில்  இவ்வாறான இலவச  மின் இணைப்புகள் 100 வீதமும் பூர்த்தியாகியுள்ளன .  புதிதாக எண்பது ஆயிரம் பேர்களுக்கு இவ்வாறான இணைப்புகள் வழங்க எதிர்பார்த்துள்ளோம்.  குறிப்பாக எல்லோருக்கும் தேசிய மட்ட ரீதியாக  மின்சாரம் வழங்கப்படும் என்பதை  உறுதிப்படுத்துகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்;

யாழ் .மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக ரீதியாகப்  புதிதாக மின் இணைப்புகள், மற்றும் மின்பாவனையாளர்களின் தொகை மதிப்பீடுகள், மற்றும் மீள்குடியேறிய மக்களுக்கான மின்சாரவசதிகள், தீவக மக்களுக்கான உப மின்சார நிலையங்கள் அமைத்தல் போன்ற விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.

Related posts: