ஜூலை 15 முதல் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, June 13th, 2022

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 10 அல்லது 11 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் இம்மாதம் 28 ஆம் திகதி ஓமானிலிருந்து புறப்பட உள்ளது.

இதற்கமைய ஜூலை 15 ஆம் திகதிமுதல் விவசாயிகளுக்கு உரிய உரங்கள் விநியோகிக்கப் படவுள்ளன.

யூரியா உரத்தின் இருப்பு உர செயலகம், வர்த்தக உர நிறுவனம் மற்றும் இலங்கை உர நிறுவனம் ஊடாக விவசாய சேவை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும்.

விவசாய சேவை நிலையங்கள் ஊடாக 50 கிலோகிராம் உர மூடை 10,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நெல் மற்றும் மக்காச்சோள விவசாயிகளுக்கு அடுத்த பெரும் போக பருவத்துக்கு உரம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: