வடக்கில் முதலீடுகளை செய்ய முன்வாருங்கள் – முதலீட்டாளர்களுக்கு வடக்கின் ஆளுநர் அழைப்பு!

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வடமாகாணத்தில் முதலீடுகளை செய்ய முன்வருமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கில் முதலிடுமாறும் அவர் அழைத்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றின்போது இவ்வாறு அழைப்பு விடுத்த அவர் மேலும் கூறுகையில் –
வடக்கில் வாழும் மக்களின் வாழ்க்கை சுமையைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் வழங்கும் அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் வடமாகாண ஆளுநராக தாம் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து பெரும்பாலான நாட்களிலும் பெரும்பாலான வாரங்களிலும் தனது மாகாண மக்களுக்கு சேவையாற்றுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணம் சீரழிய அனுமதியேன்! - நீதிபதி இளஞ்செழியன் !
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சர்ச்சைக்குரிய அமெரிக்க விமானம்!
சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகள் - சுற்றுலா பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடு...
|
|