வடக்கில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை பராமரிப்பதற்கு சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை!
Sunday, August 13th, 2023
வடக்கில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை வைத்துப் பராமரிப்பதற்கு சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ் பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார திணைக்களத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ் விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
கடந்த ஒரு வருடமாக வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்த்து. ஆனால் இப்போது போதைப் பொருள் சம்பந்தமாக ஓரளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இருந்தபோதிலும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்ற போது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
இருப்பினும் முற்று முழுதாக போதப் பொருளுக்கு அடிமையானவர்களை நீண்ட காலமாக வைத்து பராமரிக்கும் நிலையம் வடபகுதியில் காணப்படவில்லை. அவ்வாறான ஒரு விசேட நிலையத்தை அமைப்பதாயின் அதற்கு பல்வேறுபட்ட வசதிகள் தேவையாக இருக்கின்றன.
இந் நிலையில் இவ்வாறானதொரு நிலையத்தை வடக்கில் அமைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநரும் முயற்சிகளை எடுத்திருக்கின்றார்.
அதேநேரத்தில் புதிதாக ஒருவர் போதை பொருளுக்கு அடிமையாகாமல் குடும்ப உறுப்பினர்களும் சமூகத்தவர்களும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் அவசியம் எறும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|
|


