வடக்கில் நான்கு சபைகள் 20 ஆம் திகதி ஆரம்பம்!
Saturday, March 17th, 2018
உள்ளூராட்சி ஆணையாளர் தலமையில் முதலாவது சபை அமர்வு அரம்பிக்கப்படாத சபைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ,கிளிநொச்சியில் பூநகரி பிரதேச சபை, முல்லைத்தீவில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபை, வவுனியாவில் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை என்பனவே 20 ஆம் திகதி அரம்பமாகவுள்ளன .பூநகரி ,புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் , ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஈ.பி.டி.பியும் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையில் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியும் ஆட்சி அமைக்கவுள்ளன.
மேற்படி அரசியல் கட்சிகள் குறித்த சபைகளின் மொத்த ஆசனங்களில் 50 வீதம் அதற்கு மேலாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .இந்தச் சபைகளின் முதலாவது அமர்வு மேற்படி கட்சிகளின் செயலாளர்களால் பெயர் குறிக்கப்பட்;;ட தவிசாளர் தலமையில் இடம்பெறும்.
Related posts:
|
|
|


